Categories
உலக செய்திகள்

மூத்த விஞ்ஞானி படுகொலை…. “இஸ்ரேலின் அதிர்ச்சி வைத்தியம்” ஈரான் பகிங்கர குற்றசாட்டு…!!

மூத்த அணு விஞ்ஞானி படுகொலை சம்பந்தமாக தற்போது ஈரான் பயங்கர குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

ஈரானை சேர்ந்த அணு குண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும், மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சென் ஃபக்ரிசாத் செப்டம்பர் 27ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றுள்ளது. இந்த கொலைக்கு பின்னணியில்இஸ்ரேல் அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக இஸ்ரேலின் உளவு துறை மோசேத் அமைப்புதான் இந்த செயலை அரங்கேற்றியதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஈரானின் செய்தி நிறுவனம் தற்போது முக்கிய கருத்து ஒன்றை வெளியிட்டது. அந்த செய்திக்குறிப்பில், “சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியது என்றும், இந்த ஆயுதம் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தப்படும் வகையை சேர்ந்தது என்றும்” தற்போது பயங்கர குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் முன்னெடுப்புகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் ஈரானுக்கு கடுமையான அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த திட்டம் அரங்கேறியுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |