நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் பேருந்துகள், மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தையும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றியதை தொடர்ந்து பாலக்காட்டில் இயங்காமல் இருந்த கோகோ கோலா உற்பத்தி ஆலையை 550 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆக மாற்றியுள்ளனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வரவிருக்கும் மூன்றாம் அலைக்கு கேரளா தயாராகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.