Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்ட சூர்யா பட நடிகை”…. எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி….!!!!

மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை குறித்து எழுந்த விமர்சனத்திற்கு அவர் பதிலடி தந்துள்ளார்.

நடிகை நேஹா பெண்ட்சே பாலிவுட் சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களிலும் நடித்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாததால் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் திருமணம் குறித்து தான் இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது தொழிலதிபர் ஷர்துல் பாயாஸுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதனால் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் இதுபற்றி நேஹா கூறியுள்ளதாவது, ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிதாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏதோ உலகத்திலே தான் மட்டும்தான் மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதை போல் பேசுகின்றார்கள். அது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். தற்போதைய காலகட்டத்தில் இது வழக்கமாக மாறி விட்டது எனக் கூறியிருக்கின்றார்.

Categories

Tech |