திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுடெல்லியில் சமூக நீதித்துறை ,திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்படி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக மூன்றாம் பாலினதவர்களான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கும் 27% இட ஒதுக்கீட்டில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையின் மீது மத்திய அரசு முடிவெடுத்து ஒப்புதல் அளித்த பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். பின்பு சட்டத் திருத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.