மேற்கு வங்காள தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி வருகின்றது.
மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அவை 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு, 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 4 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக போராடி வருகின்றது.
அதேசமயம் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க மம்தாவுக்கு கடுமையான நெருக்கடிகளையும், சவால்களையும் அளித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி மேற்கு வங்காள 4 கட்ட தேர்தல்களிலும் மக்கள் மம்தாஜியை விலக்கி விட்டனர். மே 2ஆம் தேதிக்கு பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடிவடைந்து வீட்டிற்கு சென்று விடுவார் என்று பேசியுள்ளார்.
இதற்கு மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி வங்காளதேசத்திற்கு அண்மையில் சென்று வந்துள்ளார். அப்போது அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இவர் எங்கு சென்று வந்தாலும் கலவரங்கள் நடக்கின்றது. வங்காளதேசத்திற்கு சென்றுதான் வங்க மக்களுக்கு ஆதரவானவர் என காட்டுகிறார்.
நான் அனைத்து மதத்தினருக்கும் பொதுவாகவே செயல்பட்டு வருகிறேன் மேற்கு வங்க மக்களுக்கு நான் என்ன செய்யவில்லை. பாஜகவை விரட்டி அடிப்பதுதான் நான் செய்யாதது அதையும் இப்போது நான் செய்து விடுகிறேன். பாஜக வீழ்ந்தால் மட்டுமே தேசம் தப்பி பிழைக்கும். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பா.ஜ.க.வின் ஏஜென்டாக செயல்பட்டு வருகின்றனர் அவர்களிடம் மக்கள் விழிப்புணர்வுடன் உஷாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.