பேரையூர் மலைப் பகுதியில் காட்டுத் தீ மளமளனு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மதுரை மாவட்டம், பேரையூரில் வருவாய் துறைக்கு சொந்தமான மண்மலை, கழுதை கணவாய் மலை இருக்கின்றது இப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சருக்குகள் மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலின் பேரில் உடனே விரைந்து வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு துறை அலுவலக நிலைய அலுவலர் பெருமாள், சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி மற்றும் வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மலையின் அடிவாரத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக விரோதிகளால் இந்த மலைப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாகவும் இதற்கு அரசே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.