தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலராவுக்கு இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக் கூடங்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ள நிலையில், பள்ளிகளை சுத்தம் செய்வதற்காக மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.