தமிழகத்தில் சாலையில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக புதிய போக்குவரத்து சட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ 10000 அபராதமும் விதிக்கும் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது.
இதனை அடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாகவும் அதிவேகமாக காரை ஓட்டியதாகவும் ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 10 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.