அமெரிக்காவில் பெற்றோர் மூன்று மாத குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பெற்ற குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெற்றோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யார்க் சிட்டியை சேர்ந்த தம்பதி மரிசெல் டொரோ (20) மற்றும் வயட் ஜோன்ஸ் (25) தங்களது மூன்று மாத குழந்தையை ஆபாச வீடியோ எடுத்தும் பாலியல் ரீதியான துன்புறுத்தியும் வந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
இதனிடையே அவர்களிடமிருந்த 3 மாத குழந்தை மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் வயட் ஜோன்ஸ் குழந்தை பிறந்து ஒரு மாதத்திலிருந்து இந்த செயல்களை செய்து வந்தோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.