கடலூரில் தனது மூன்று வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சகுப்பம் ஜெகதேவ் நகரில் செல்வகுமார் என்பவர் அவரது 31 வயதுடைய மனைவி நவீனா என்பவருடன் வசித்து வருகிறார். அவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கின்றது. இதனையடுத்து செல்வகுமார் மஸ்கட் நாட்டிற்கு வேலை பார்ப்பதாக சென்றுள்ளார். அதனால் நவீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று நவீன திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நவீனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வழக்கு பதிவு செய்த கடலூர் புதுநகர் காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.