மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த வில்லன்களில் ஒருவர். இவரை 90கிட்ஸ் யாரும் அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். சில கருத்துக்களை வெளிப்படையாக பேசி சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு பட விழாவில் கலந்துகொண்டு மன்சூரலிகான் சினிமா மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் பேசியுள்ளார்.
மேலும் விஜய் வருமான வரித்துறை படப்பிடிப்பின் போது விசாரித்ததையும் அவர் கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவான வெளியான அரபிகுத்து பாடல் பற்றியும் பேசியுள்ளார். அரபிக்குத்து போன்ற பாடல் எழுதுவதில் சிவகார்த்திகேயன் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். பல மொழிகளில் ஆராய்ச்சி செய்து பொதுமக்களுக்கு புதுமையான வார்த்தைகளை உபயோகித்து பாடல் எழுதி அசத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பது போல உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அனிருத் செய்யும் சாதனைகள் மிகப் பெரியது என மன்சூர் அலிகான் கூறியுள்ளார். மேலும் அதில் இருந்து சில வரிகளை பாடி அரங்கையே அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.