Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மூலவர் காளஹஸ்தீஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு”… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

மூலவர் காளஹஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுநாவலூர் ஊராட்சியை சேர்ந்த ரெட்டியார்பட்டி கிராமத்தில் 1600 ஆண்டுகளுக்கு முன் சோழர் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் மரகதவல்லி தாயார் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நிறைய கல்வெட்டுகள் அமைந்திருக்கின்றது. தமிழ் வருடப் பிறப்பன்று கோயிலில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு வழக்கமாக நடைபெறும்.

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு செல்வவிநாயகர் காளஹஸ்தீஸ்வரர் மரகதவல்லி 27 நட்சத்திர அதிபதிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வஸ்திரங்களை அணிவித்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து 6:10 மணியளவில் சூரியன் உதயத்தின் போது மூலஸ்தானத்தில் இருக்கும் கலஹஸ்தீஸ்வரர் மீது சூரிய ஒளிபட்டது. அதன்பிறகு மரகதவல்லி தாயார் காளஹஸ்தீஸ்வரர் நந்தீஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனால் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Categories

Tech |