Categories
விவசாயம்

மூலிகை பயிர்கள்: விவசாயிகளே லாபம் பெறணுமா?…. இதை சாகுபடி செய்யுங்க…..!!!!!

வீட்டுத்தோட்டத்தில் வளரக்கூடிய பல்வேறு விதமான தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்றாகும். நம் பாரம்பரிய மருத்துவத்தில் உதவி கரமாக திகழும் மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கின்றன. உலக அளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 % பரப்பில் இருக்கிறது. சுமார் 15 ஆயிரம் வகையான அபூர்வமான மூலிகைப் பயிர்கள் நமதுநாட்டில் மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் 20 வகையான அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 வெஜிடேட்டிவ் மண்டலங்கள் இருக்கின்றன.

சுமார் 45,000 வகை தாவரயினங்கள் 15 பயாட்டிக் மண்டலங்களில் வளர்க்கப்படுகிறது. தற்காலம் மதிப்பீட்டின் 6,198 வகையான மூலிகை பயிர்கள் இமாலயம், கடற்கரை, பாலை வனம், மழைப் பொழியும் வனங்களிலும் வளர்கிறது. நவீன மருத்துவத்தில் 25% மூலிகை பயிர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகள்தான் ஆங்கில மருந்து தயாரிப்புக்கு உதவுகிறது. இதனிடையில் இந்திய மருத்துவத்தில் 2,400 தாவரவகைகள் பயன்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஆயுர்வேதத்தில் 1,587 மூலிகை பயிர்கள், சித்த மருத்துவத்தில் 1,128 வகைகளும், யுனானி பிரிவில் 503 தாவரங்களும், சோவாரிக்பா எனும் மருத்துவத்தில் 253 மூலிகை பயிர்கள் பயன்படுத்தப்படுகிறது. நவீன ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உள்நாடு, வெளிநாடு என்று யார் வேண்டுமானாலும் தேவையின்படி சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக தொடர்புகொண்டு நம் மருந்துக்கு உதவும் தாவரம் மற்றும் தாவரப்பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். இவற்றிற்கு இலவச செயலி “E – CHARAK” எனும் பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

Categories

Tech |