உலகின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்திவரும் ஆராய்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் உள்ள மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் எலன் மஸ்க். அவர் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பிரபலமடைந்தவர். தற்போது நியூராலிங்க் என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் மனித மற்றும் விலங்குகளின் மூளையை ஒரு இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் வெகுவாக நடந்து வருகின்றன. அவ்வாறு குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறுவர்களை கொண்டது போன்ற ஒயர்லெஸ் கருவியை பொருத்தி உள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைய வழியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எலன் மஸ்க் தெரிவித்தார்.
அந்தத் திட்டம் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். அந்த ஆராய்ச்சி பல்வேறு தரப்பினரை பெரும் ஆச்சரியத்திற்கு ஆளாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மறதிநோய் முதுகெலும்பு காயங்கள் போன்றவற்றை சரிசெய்ய முடியும் எனவும் நம்பப்படுகிறது.