விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்ற 33வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த ஏழாம் தேதி ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்த இளநரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளை சாவு அடைந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி விருப்பம் தெரிவித்ததை அடுத்து இதயம், கல்லீரல், நுரையீரல்,சிறுநீரகம் மற்றும் கருவிழிகள் ஆகியவை திருச்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த உறுப்புகள் கிட்டத்தட்ட எட்டு நபர்களின் உயிரைக் காக்க உதவும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதற்கிடையே சந்தோஷின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் சந்தோஷின் மனைவி புவனேஷ்வரியிடம் உடல் உறுப்பு தான சான்றிதழை வழங்கினார். விபத்தில் மூளை சாவு அடைந்த பிறகு எட்டு பேருக்கு உயிர் கொடுத்த இந்த இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.