Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த வாலிபர்!…. பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்…. அப்படி என்ன பண்ணாங்க?…!!!!!

அரியலூர் தா.பழூர் அருகேயுள்ள சோழமா தேவி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாய கூலிதொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்தி (24). இவர் திருவள்ளூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சென்ற 20ஆம் தேதி இரவு திருவள்ளூரிலிருந்து வந்தவாசி நோக்கி தன் நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத வகையில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 2 பேரையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக கார்த்தி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் கார்த்திக் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் கார்திக்கின் பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை வாயிலாக தானமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை முடித்து பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடல் கிராமமக்களின் அஞ்சலிக்கு பின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.

Categories

Tech |