மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மனநிலையை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக செய்யும் நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பார்க்கலாம்.
நோவா என்ற 10 வயது சிறுவன் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இந்த சிறுவனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காப்பாற்றலாம் என கூறியுள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது சிறுவனின் மனநிலை மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் நோவாவின் பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனையடுத்து நோவாவின் பெற்றோர்கள் இணையதளத்தில் என்னுடைய மகன் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், அவனுக்கு கார் மற்றும் கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என பதிவிட்டுள்ளனர்.
இதை கேள்விபட்ட அமெரிக்க கால்பந்து விளையாட்டு வீரர் தாமஸ் எட்வேர்ட் பேட்ரிக் பேடி செல்போனில் வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு நோவாவுடன் பேசியுள்ளார். அவர் மூளை புற்று நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதி என்றும், அதை நினைத்து பயப்பட வேண்டாம் எனவும் சிறுவனிடம் கூறியுள்ளார்.மேலும் கால்பந்து விளையாட்டின் இறுதிசுற்று விளையாட்டை பார்ப்பதற்கான டிக்கெட்டையும் நோவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனால் அந்த சிறுவன் மிகவும் அதிர்ச்சி அடைகிறான். மேலும் கால்பந்து வீரர் செய்தது மிகச் சிறிய விஷயம்தான்.
இதனால் மூளை புற்றுநோய் சரியாகும் என்பதா தெரியவில்லை. ஆனால் அந்த சிறுவனின் இடத்திலிருந்து பார்க்கும் போது கால்பந்து வீரர் தாமஸ் செய்தது அவனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் ஆகும். அந்த ஒரு நிமிட மகிழ்ச்சி சிறுவன் தனக்கு இருக்கும் மூளைப் புற்று நோயை மறந்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியாகி விடுகிறான். நாம் உடல் நலக் குறைவால் அவதிப்படும் ஒருவருக்கு பணமோ பொருளோ கொடுத்துதான் உதவ வேண்டும் என்றில்லை. நாம் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.