Categories
லைப் ஸ்டைல்

மூளையை நேரடியாக பாதிக்கும் உணவுகள்… உயிருக்கே ஆபத்து… உஷாரா இருங்க…!!!

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நமது மூளையை அடிப்படையாகக் கொண்டே உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன. அதன்படி நாம் தினசரி சாப்பிடும் உணவுகள் நம் மூளையை பாதிக்கும். அதனால் மூளையை பாதிக்கும் சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி மக்கா சோளம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. இருந்தாலும் மைக்ரோவேவில் தயாரிக்கப்படும் பாப்கார்ன்களில் அதிக அளவு கொழுப்பு அடங்கியுள்ளது.

அது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். சோடியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்து. பிரைட் மற்றும் துரித உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுதல் மூளைக்கு மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சீஸ் மற்றும் வெண்ணையை சாப்பிட்டால் அதிலுள்ள கொழுப்புகள் மூளையை பாதிக்கும். மேலும் டிரன்ஸ் கொழுப்பு உணவுகள் உடலில் அதிகபடியான கொழுப்புகளை உண்டாக்கும். அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் காற்று நிரப்பிய பாக்கெட்டுகளில் கிடைக்கும் தின் பண்டங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |