வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அர்ச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் 11 வயதான சுதீஷ் கடந்த நான்காம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென சிறுவன் சதீஷ் மூளைச்சாவடைந்திருக்கின்றார். இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்திருக்கின்றார்கள் சிறுவனின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டிருக்கிறது. அதன்படி இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம் ஜி எம் மருத்துவமனைக்கு கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வலது சிறுநீரகம் சென்னை எஸ் ஆர் எம் சி மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
தானமாக பெறப்பட்ட சிறுவன் இதயம் வேலூரில் இருந்து சென்னை அமைந்த கரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஆர் தனியார் மருத்துவமனைவரை சுமார் 166 கிலோமீட்டர் வரை பயணிக்க இருக்கிறது. உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் சுமார் 4 மணி நேரத்திற்குள் மற்றோருக்கு பொருத்த வேண்டும் என்பதினால் ஒரு மணி 30 நிமிடங்களுக்கு இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்ய இருக்கின்றார். இந்த நிலையில் மாலை நேரம் என்பதால் தாமதம் ஏற்படாமல் இருக்க வேலூரில் இருந்து சென்னை வரை சாலையை காவல் துறையினர் சீரமைத்து தர இருக்கின்றார்கள் வழக்கமாக இந்த சாலையில் வேலூரில் இருந்து சென்னைக்கு பயணிக்க சுமார் மூன்றரை மணி நேரம் வரை எடுக்கும். மேலும் தற்போது வானம் மேகமூட்டத்துடன் சில இடங்களில் மழை பெய்து வருவதாலும் ஆம்புலன்ஸ் இயக்குவது ஓட்டுநருக்கு கூடுதல் சவாலாக அமையும் இந்த நிலையில் உடல் உறுப்பு தேவைப்படுவோர் transtan.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உறுப்பு மற்றும் பதிவு ஆணையம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகின்றது.