Categories
சினிமா தமிழ் சினிமா

‘மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்’… குட்டி ரியூனியன் போட்ட அர்ச்சனாவின் அன்பு அணி… வெளியான புகைப்படம்…!!!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். சமீபத்தில் பிக்பாஸிலிருந்து வெளியேறிய  ரேகா,சம்யுக்தா, வேல்முருகன், சுரேஷ் ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர் .

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அர்ச்சனா அவரின் அன்பு அணியில் இருந்த ரமேஷ், நிஷா ஆகியோரை சந்தித்து எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் அர்ச்சனா , ‘சில நல்ல நட்புகள் கடினமான தடைகளை எளிதாக கடக்க உதவுகின்றன . மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான்’ என பதிவிட்டுள்ளார் ‌. இந்த புகைப்படம்  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |