தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுக்கு சுதந்திர தின வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய ஒன்றியத்தின் 75 வது விடுதலை நாள் விழா, உணர்வில் கலந்து கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நாட்டு கொடியை உயர்த்துகிறேன்.
மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்ற உரிமையை பெற்று தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி மூவர்ண கொடியை ஏற்றி இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமை பெற உறுதி ஏற்பது தான் விடுதலை பவள விழாவான இந்த 75 ஆம் ஆண்டு நினைவில் கொண்டாட்டங்களில் நோக்கமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.