கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சிவசங்கரை வரும் 23-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக NIA, சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னால் ஊழியர் சொப்னா சரித்குமார், சந்திப் நாய்யார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை சுங்கத்துறை மற்றும் NIA அதிகாரிகள் விசாரணை செய்துவரும் நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி திரு. சிவசங்கர் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் 23-ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. ஏற்கனவே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 23-ம் தேதி வரை திரு. சிவசங்கரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது