நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் தடுப்பூசி போடுபவர்களுக்கு பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சத்தீஷ்கர் மாநிலம் பீஜப்பூரில் தக்காளியை இலவசமாகத் தந்து கொரோனா தடுப்பூசி போட மக்களை நகராட்சி அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். தடுப்பூசி போட மக்கள் தயங்கும் நிலையில் அதிகாரிகள் நூதனமான முறையில் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளனர். மேலும் மக்களுக்கு போதிய அளவில் தக்காளிகளை வியாபாரிகள் நகராட்சிக்கு தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.