Categories
மாவட்ட செய்திகள்

மெகா சல்யூட் காஞ்சிபுரம் மக்களே….!!!! இவங்க 100% தடுப்பூசி செலுத்தியாச்சு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவிகிதம் மக்களும் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இது ஒரு பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. குறித்து கூறிய சுகாதாரத்துறை அதிகாரி, தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டு விட்டது. நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி 71.32 சதவிகிதம் பேர் செலுத்தியுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 6.47 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக சுகாதாரத் துறை வாரத்தில் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.

Categories

Tech |