Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் நேரடி ஆய்வு…. நிர்ணயிக்கப்பட இலக்கு…!!

மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 5-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக மொத்தம் 312 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 32,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும். இதனையடுத்து முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்ட பொது மக்களுக்கு உதவி கலெக்டர் விஷ்வெஸ்வரி பரிசுகளை வழங்கி உள்ளார். இந்த சிறப்பு முகாமில் திருநங்கைகளும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Categories

Tech |