செப்டம்பர் 17-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி குறைவாக இருப்பதன் காரணமாகவும், வெள்ளிக்கிழமை என்பதனாலும் தடுப்பூசி முகாம் வரும் 19ஆம் தேதிக்கு மாற்றப்படுள்ளது. கடந்த முறை தடுப்பூசி போடப்பட்ட போது தட்டுப்பாடு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதலாக டோஸ்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories