தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டனர்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் 515 மையங்களில் நடைபெற்ற தடுப்பு முகாமில் 1,06,156 பேர் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில் திருச்சி மாவட்டம் 2 வது இடத்தை பிடித்துள்ளதாக ஆட்சியர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.