Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்….31,000 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி….!!!!!!!!!

நாட்டின் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும்  சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. கோவை, காந்திபுரம் பஸ் நிலையம், ரயில் நிலையம், புலியகுளம், ராமநாதன் பெரிய கடை வீதி உட்பட மாவட்ட முழுவதும் நேற்று 1,515 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் 3வது தவணை தடுப்பூசி  செலுத்திக் கொள்ள பொதுமக்கள் நேற்று காலை முதல் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் ஆதார் எண் மற்றும்  இரண்டாவது தவணை  தடுப்பூசி செலுத்தப்பட்ட மாதம் போன்றவற்றை மருத்துவ குழுவினர் சரிபார்த்த பின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் முதல் தவணை தடுப்பூசி 936 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 18,604 பேரும், போஸ்டர் தடுப்பூசி 31 ஆயிரத்து 17 பேரும், இன மொத்தம் 50 ஆயிரத்து 557 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |