Categories
உலகசெய்திகள்

“மெக்சிகோவில் இந்த சிலையை திறந்து வைப்பதில் நான் பெருமை அடைகிறேன்”… மக்களவை சபாநாயகர் பேச்சு…!!!!!!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றிருக்கின்ற இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவுகள் பற்றி விவாதம் மேற்கொண்டுள்ளனர். மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்துள்ளார். அப்போது சுவாமி விவேகானந்தரின் மனிதநேயத்திற்கு கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து வைப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.

இலத்தின் அமெரிக்காவில் சுவாமிஜியின் முதல் சிலை இதுவாகும். இந்த சிலை மக்களுக்கு குறிப்பாக இந்த பகுதி இளைஞர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் உத்வேகமாக இருக்கும். மேலும் நமது நாட்டை புதிய உயர்த்திற்கு கொண்டு செல்லும் சுவாமிஜி செய்து மற்றும் மனித குலத்திற்கான போதனைகள் புவியியல் கட்டுப்பாடுகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டதாகும். அதாவது அவரது செய்தி முழு மனித குலத்திற்கும் இருக்கிறது இந்த நிலையில் இன்று மெக்ஸிகோவில் அவரது சிலை திறந்து வைத்து அவருக்கு பணிவான அஞ்சலி செலுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |