மெக்ஸிகோவில் தொடர்ந்து பெண்கள் கொல்லப்படுவது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்று காலத்திலும் கொலை செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை விகிதம் 9.2% ஆக அதிகரித்திருக்கிறது. இந்த வருட முதலில் 17,982 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த வருடம் இதே காலத்தில் நடந்த 17,653 கொலைகளை விட 1.9 சதவீதம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பெண்கள் கொல்லப்பட்டு வர காரணம் மக்கள் தங்கள் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது தான். இந்த வருடம் முதல் ஆறு மாதங்களில் 489 பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஆனால் இது 2019ம் வருட பாதியில் இந்த எண்ணிக்கை 448 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொற்றுநோய் பரவிவரும் மெக்சிகோவில் வன்முறையின் முக்கிய காரணமாக விளங்கும் போதைப்பொருள் கும்பலை தடுக்காமல் விட்டுவிட்டது. சென்ற வாரம் ஆன்லைனில் வெளிவந்த வீடியோ பதிவு ஒன்றில் சுமார் 75 கனரக ஆயுதங்களை வைத்து போதைப்பொருள் கும்பலை சேர்ந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் இராணுவ முறையில் கவச லாரிகளுடன் பேரணி நடத்தி வந்தனர். மெக்சிகோவின் பாதுகாப்புத் துறை இந்த வீடியோ பதிவு உண்மையானது என்றும் “இராணுவ முறை பயிற்சிக்கான ஆதாரங்களை இது காட்டுகிறது” என்றும் கூறி இருக்கிறது.