மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்ஸிகோவின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,090 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 522 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66,851 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் 26.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.