மெக்சிகோ நாட்டில் உள்ள காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மெக்சிகோ நாட்டின் போர்ட் அவ் பிரின்ஸ் மாகாணம் ஹைடியன் நகரம் ஹென்ஸ்ஹப் என்ற பகுதியில் அனாதை குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட அந்த காப்பகத்தில் 66 குழந்தைகள் வசித்துவந்தனர். இந்நிலையில், அந்த காப்பகத்தின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டாவது தளத்திற்கும் பரவியதால் குழந்தைகள் அனைவரும் காப்பக கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்திற்குள் சிக்கி இருந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் பல குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், இந்த விபத்தில் சிக்கி 15 சிறுவர்கள் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் பரிதாபகாக உயிரிழந்தனர்.
முதல் தளத்தில் மது பார் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட தீ இரண்டாம் தளத்திற்கும் பரவியதாக கூட்டப்படுகிறது. இந்த விபத்தில் 13 குழந்தைகள் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீ காயம் அதிமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.