மெக்சிகோ நாட்டு கடல் பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் நடுக்கடலில் படகை துரத்திச் சென்று 1.2 டன் எடையுள்ள கோக்கைன் போதைப் பொருளை மெக்சிகோ ராணுவம் கைப்பற்றியுள்ளது.
பசிபிக் கடலில் அமைந்துள்ள puerto vallarta என்ற பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுக்கடலில் போதைப் பொருளை கடத்தி செல்வதை அறிந்த மெக்சிகோ ராணுவத்துறையினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த படகை மடக்கி மடக்கி பிடித்து அதில் இருந்த போதைப் பொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றிள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மெக்சிகோ ராணுவத்தினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.