மெக்சிகோவில் மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 6 மெக்ஸிகோ ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மெக்சிகோவின் தென் கிழக்கு மாநிலமான வேராகிருஸ்சில் ஒரு மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எமிலியானோ சபடா நகராட்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணி அளவில் லியர்ஜெட் 45 விமானம் புறப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால் 6 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த விபத்து குறித்து ராணுவம் விசாரணை மேற்கொள்ளும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.