Categories
மாநில செய்திகள்

மெட்ரோ இல்லாத இடங்களே இல்லை… “கனெக்ட் ஆகும் கிளாம்பாக்கம் பரந்தூர்”…CMRL ன் சூப்பர் பிளான்…!!!!!!

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வருகின்றது. மெட்ரோ ரயில் இல்லாத இடங்களை இல்லை எனக் கூறும் அளவிற்கு புதிது புதிதாக திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் சமீபத்திய ஹைலைட் பரந்தூர் விமான நிலையமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் ஆகும். இவை இரண்டும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சென்னையில் எங்கிருந்தாலும் சொகுசான மற்றும் விரிவான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. மேலும் இதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டது சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் மூன்றாவது வழித்தடம் ஆனது மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இரண்டு வரையிலும், நான்காவது வழித்தடம் ஆனது பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், ஐந்தாவது வழித்தடம் ஆனது மாதவரம் பால் பண்ணை முதல் சோளிங்கநல்லூர் வரையிலும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான திட்டத்தை 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.  இரண்டாம் கட்ட திட்டத்தை மேலும் 93 கிலோ மீட்டர் வரை நீட்டிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு இருக்கிறது. அதாவது மூன்றாவது வழித்தடத்தை 45.8 கிலோமீட்டர் தூரமும் நான்காவது வழித்தடத்தை 26.1 கிலோமீட்டர் தூரமும் ஐந்தாவது வழித்தடத்தை 47 கிலோ மீட்டர் தூரமும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்காவது வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் தான் சென்னையின் இரண்டாவது சர்வதேச கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

அதனால் மெட்ரோ ரயில் வசதியானது பயணிகளுக்கு பெரிதும் வரப் பிரசாதமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இதனை அடுத்து மூன்றாவது வழிதடத்தை சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கீளாம்பாக்கம் வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில்தான் சென்னையின் இரண்டாவது புறநகர் பேருந்து நிலையம் வர இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டும் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுமை குறையும் அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படுவது சென்னை மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க விரைவில் தென்றல் விடப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திறப்பில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த அறிக்கையில் நெருக்கடியான பகுதிகள் பிக் ஹவர் பயணம் மேற்குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்து முப்பது வருடங்களுக்கான பயண தேவை போன்ற விவரங்கள் இடம்பெற இருக்கிறது.

Categories

Tech |