சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பள்ளங்கள் தோண்ட பட்டுள்ள நிலையில் திருவெற்றியூரில் டீ கடை மற்றும் பேக்கரி கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டையில் தொற்றுநோய் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை மற்றும் பேக்கரி உணவு கட்டிடங்கள் இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் இடிந்ததால் உயிர் சேதம் ஏதுமில்லை, போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படாமல் அதிக அழுத்தத்துடன் தோண்டப்படுவதால் கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.