Categories
மாநில செய்திகள்

மெட்ரோ பயணிகளுக்கு பரிசு….. குலுக்கல் முறையில் காத்திருக்கும் ஜாக்பாட்…. ரெடியா இருங்க மக்களே…!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் அல்லது பரிசு கூப்பன்கள் தலா 30 பேருக்கு வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் டி கடந்த ஒரு மாத காலத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை பயணித்த பயணிகளின் பட்டியலைக் கொண்டு குலுக்கல் முறை நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் 30 பயணிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் மற்றும் கூப்பன்கள் பகிர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாதத்தில் அதிகமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் அல்லது கூப்பன் வழங்கப்படும். முப்பது நாட்களுக்கு விருப்பம் போல் பயணம் செய்ய மெட்ரோ பயண அட்டை வழங்கப்பட உள்ளது. அதேபோன்று ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 1500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா 2000 மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |