சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபர் மாதம் 61 லட்சத்து 56 ஆயிரத்து 360 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 21ஆம் தேதி 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதே போல் செல்போன் மூலமாக பெறப்படும் qr கோடு முறையை பயன்படுத்தி 18 லட்சத்து 57 ஆயிரத்து 688 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் பயண அட்டையை பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களில் க்யூ ஆர் கோடு பயண சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Categories