சென்னை மெட்ரோ ரயிலின் புதிய கட்டண விவரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவையானது சென்னையில் 29 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 7.25 கோடி மக்கள் இந்த மெட்ரோ ரயில் பயணத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் மெட்ரோ ரயிலை அதிகமான மக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதற்குகேற்ப முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ. 10 முதல் 20 வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய கட்டண விபரத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பயணிகள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.