மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட துவக்கமாக ரெட் லைன் திட்டமானது சோழிங்கநல்லூர் பகுதியிலிருந்து மாதவரம் வரை அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 47 கிலோமீட்டர் தொலைவில் 48 நிறுத்தங்களை அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக 2 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், திருமங்கலம் மற்றும் நாதமுனி இடையில் அண்ணா நகர் வரை மெட்ரோ ரயில் நிலையமானது அமைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய ரயில்வே நிலையம் அமைப்பதற்காக திருமங்கலம் பகுதியில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைய 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்ட உடன் ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் மெட்ரோ ரயில் மூலமாக எளிதில் வேலைக்கு சென்று வரலாம். மேலும் ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற சேவைகளும் அமலுக்கு வந்து விட்டால் சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது எனவும், மக்கள் சுலபமாக பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.