Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து… பயணிகளுக்காக புதிய சேவைகள் தொடக்கம்…!!!

பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பைக் மற்றும் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. உபேர் ஆட்டோவில் பயணிக்கும் 20 சதவீதம் கட்டணச் சலுகையும் ரேபிடா  எனும் செயலி வலி முன்பதிவு பயன்படுத்தி பைக்கில் 30 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக 12 சிற்றுந்து இணைப்பு பேருந்துகள் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக பயணிகளுக்கு கூடுதல் வசதியாக மற்றும் ஆட்சியை ஏற்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு மெட்ரோ ரயில் இனைய வாயிலில் ரேபிடாபைக், உபேர் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி சனிக்கிழமை அன்று தொடங்கி வைத்துள்ளார். பின்னர் அது குறித்து பேசியபோது, இந்த புதிய வசதியை பயணிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். உபேர் ஆட்டோவில் பயணிப்போர் 20 % கட்டண சலுகையையும், ரெபிடா பைக்கில் பயணிப்போருக்கு 30% கட்டண  சலுகையும் வழங்கப்படுகிறது.உபேர் ஆட்டோ கிண்டி ,ஆலந்தூர்,எழும்பூர், கோயம்பேடு, திருமங்கலம், ஆகிய ஐந்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |