Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையத்தில் “சிறுநீர் கழிப்பது இதுவே முதல்முறை”…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.அங்கு அசுத்தப்படுத்துவது மற்றும் எச்சில் துப்புவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பது இதுவே முதன் முறையாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும். பயணிகளுக்கான கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.ஆனால் பயணிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்தினால் அவர்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்.இதன் மூலம் ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |