Categories
சென்னை மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. 12 மினி பேருந்துகள் இயக்கம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில் குறைந்த அளவிலான மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி முதல்கட்டமாக மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக 12 மினி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.இதன் மூலமாக மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருகை அதிகரிக்கும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 210 மினி பேருந்துகள் உள்ள நிலையில் அறுபத்தி ஆறு மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள 144 மினி பேருந்துகளை இயக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |