சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சிறிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன் முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் 210 சிறிய பேருந்துகள் உள்ளது. இருந்தாலும் பல்வேறு காரணங்களால் 66 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு மற்றும் திருவெற்றியூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பு மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories