Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு…. வெளியான செம சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பல புதிய வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது மெட்ரோ ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது மெட்ரோ பயணிகள் தாங்கள் இறங்கும் இடத்தில் இருந்து சென்று வருவதற்கான வசதி மேம்படுத்தபடுவதுதான். தற்போது எழும்பூர் சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் புறநகர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கு செல்லும் தென்னக ரயில்வே பயண டிக்கெட்டை இந்த மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதைத் தவிர சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஐடி மற்றும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சென்று வருவதற்காக அந்தந்த ஐடி நிறுவனங்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கான பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்கின்றது. இதுபோன்ற வசதிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்து வருவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Categories

Tech |