சென்னையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
அதாவது காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் எட்டு மணி வரையும் மூன்று நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதனைப் போலவே விம்கோ நகர் மற்றும் விமான நிலையம் இடையே ஆறு நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் -பரங்கிமலை,சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.