Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் வழித்தடங்களில்…. எஃப்.எஸ்.ஐ கட்டணம் 50 சதவீதம் குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து வழித்தடங்களிலும் 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு ப்ரீமியம் எஃப் எஸ் ஐ எனப்படும் கூடுதல் தள பரப்புக்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மூன்றாவது வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. மெட்ரோ ரயில் சேவை உள்ள வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேறும் வகையில் கூடுதல் எஃப் எஸ் ஐ வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தற்போதைய அரசு மெட்ரோ வழித்தடங்களில் கட்டடங்களுக்கான தல பரப்பு குறியீட்டுக் கட்டணத்தில் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது செயலில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடங்கள், மெட்ரோ சிட்ட பணிகள் நடக்கும் வழித்தடங்கள்,உத்தேசிக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் ஆகியவற்றில் 500 மீட்டர் தொலைவு வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு கூடுதல் பரப்பளவு குறியீடு பெறுவதற்கான கட்டணங்கள் 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |