Categories
சினிமா

“மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது”…. ரம்ஜான் வாழ்த்து சொன்ன கவிஞர் வைரமுத்து…..!!!!!

ரம்ஜான் பண்டிகை இன்று(மே.3) நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டின் முக்கியமான தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கவிஞரும், தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து அவர்கள், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

“மெய்வருத்தம் ஏற்று சக மனிதனின் துயர் உணர்கிறது”

“ஈகையை வாழ்க்கையின் பாகமாக்குகிறது”

“சமூக வாகனத்திற்கு சகோதரத்துவமே சக்கரம் என்கிறது”

“உலக நாடுகளின் கொடிகளிலெல்லாம் சமாதானப் பூக்களையே யாசிக்கிறது”

“ரமலானை வகுத்தவர்களை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |