கிழக்கு ஆப்பிரிக்க தேசம் கென்யாவில் உள்ள போகோரியா ஏரியில் பிளமிங்கோ பறவைகள் பறந்து செல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் அழகிய காட்சி வீடியோவில் வெளியாகி இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏராளமான பறவைகள் இந்த பகுதிக்கு வந்து செல்கிறது. இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கென்யாவின் வடதிசை மலை சரிவுகளில் பாயும் வசேஜஸ் ஆறு இந்த ஏரியில் கலக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வருகின்றன. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பறவைகளின் வீடியோ தான் தற்போது இணையத்தினையே மிரள வைத்துள்ளது.
https://twitter.com/Yoda4ever/status/1584910148497186817