மெரினா கடற்கரையில் இன்னும் ஓரிரு நாட்களில் கருணாநிதி நினைவிட பணிகள் தொடங்கப்படும்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் 2.25 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய்க்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இவற்றிற்கான திட்ட மதிப்பீடுகள் தயாராக இருக்கிறது என்று அமைச்சர் எவ. வேலு கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றிய விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளதாகவும், தற்போது அவை நிதித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடப்பட்டு கருணாநிதி நினைவிட பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஏவா வேலு தெரிவித்துள்ளார்.